என் மலர்
செய்திகள்

கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கடலூர் வட்ட கிளையின் சார்பில் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ராஜன்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கடலூர் வட்ட கிளையின் சார்பில் கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் ராஜன்பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், கோட்ட செயலாளர் ஜெயராமன், கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் ஞானமணி, இயக்குனர் பிரதாப், வட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாற்றம் பரிந்துரை செய்வதற்கு இணைதள வசதிகள் மற்றும் அதற்கான செலவின தொகையை வழங்க மறுக்கும் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.
Next Story






