என் மலர்
செய்திகள்

ஜெயங்கொண்டம் செல்லியம்மன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட அம்மன் சிலை மீட்பு
ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி அடுத்த மேலணிகுழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலை கரும்பு காட்டில் மீட்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள மேலணிகுழி கிராமத்தில் செல்லியம்மன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (62) என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் தினந்தோறும் காலை 5 மணி முதல் 7 மணி வரை கோவிலை திறந்து வைப்பது வழக்கம். கடந்த 7ம் தேதி இரவு வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
8-ம் தேதி காலை வழக்கம் போல் பூசாரி ராமலிங்கம் பூஜை செய்ய வந்துள்ளார். அப்போது அந்த கோவிலின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்ற பார்த்த போது கோவிலில் இருந்த சிலையை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது. கொள்ளை போன சாமி சிலை சுமார் ஒன்றரை அடி உயரமும், 25 கிலோ எடையும் உடையதாகும். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரனை செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அருகில் உள்ள பாப்பாகுடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற விவசாயியின் கரும்பு வயலில் கரும்பு வெட்டிய போது வயலுக்குள் சாமி சிலை கிடப்பது தெரிந்து போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர், உடன் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி, இன்ஸ்பெக்டர் வேலுசாமி, மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் சிலையை கொள்ளையடித்து வயலுக்குள் கொண்டு வந்து போட்டது யார் என விசாரித்து வருகின்றனர்.
Next Story






