search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    500 மின் கம்பங்கள் உடைந்தன: குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம்
    X

    500 மின் கம்பங்கள் உடைந்தன: குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம்

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதனால் மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளன. நாகர்கோவில், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், சந்தையடி, சாமிதோப்பு போன்ற பகுதிகளில் ஏராளமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்து விட்டன. மேலும் மின் கம்பங்களில் மரக்கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். மின் கம்பங்களை புதிதாக மாற்ற வேண்டியிருப்பதால் இந்த பணியை உடனடியாக முடிக்க முடியாது. இதனால் குமரி மாவட்டம் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



    குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்துக்கு அடுத்தபடியாக வாழைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது சூறாவளி காற்று காரணமாக மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வாழை விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×