என் மலர்

    செய்திகள்

    மதுரை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை-வெள்ளி கொள்ளை
    X

    மதுரை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை-வெள்ளி கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தலைமை ஆசிரியர் வீட்டில் 12 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள டி. தொட்டியபட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் புதுச்சேரிக்கு சென்று விட்டார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை திறந்து அதில் இருந்த 12 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். இன்று காலை வீடு திரும்பிய ராஜேந்திரன் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×