என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரனூரில் மருத்துவ முகாம்
    X

    கீரனூரில் மருத்துவ முகாம்

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் குளத்தூர் ஊராட்சி இளையாவயல் கிராமத்தில் நடைபெறுகிறது.
    கீரனூர்:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் குளத்தூர் ஊராட்சி இளையாவயல் கிராமத்தில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில் நடைபெறுகிறது.

    டாக்டர் குழுவினர் ராமமூர்த்தி, சையதுஇப்ராகிம், நிரஞ்சனா, அருண்குமார் ஆகியோர் ரத்த அழுத்த நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக செய்தனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் குளத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கிலிமுத்து, திமுக குளத்தூர் மணிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×