என் மலர்

  செய்திகள்

  கடலூரில் இன்று காலை கடலில் படகு கவிழ்ந்தது: 5 மீனவர்கள் உயிர்தப்பினர்
  X

  கடலூரில் இன்று காலை கடலில் படகு கவிழ்ந்தது: 5 மீனவர்கள் உயிர்தப்பினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூரில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் தத்தளித்த 5 மீனவர்களை போலீசார் மீட்டனர்.
  கடலூர்:

  கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மணிவண்ணன்(வயது 55), கவாஸ்கர் (38), ஆனந்தன்(34), ஷாகுல்(22), வால்மணி(50) இவர்கள் இன்று காலை பைபர் படகு ஒன்றில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

  நடுக்கடலில் சென்ற போது பயங்கர சூறாவளிக்காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்கு செல்ல படகில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

  கடலூர் முகத்துவாரம் அருகே வந்தபோது படகு திடீரென்று கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த மீனவர்கள் 5 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் சயிரஸ், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடலில் விழுந்து தத்தளித்த 5 மீனவர்களை மீட்டனர்.

  கடலில் விழுந்ததில் மீனவர் மணிவண்ணனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கடலில் கவிழ்ந்த படகை போலீசார் மீட்டனர்.
  Next Story
  ×