என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் வேன் - லாரி மோதல்: 10 பேர் படுகாயம்
  X

  திருப்பூரில் வேன் - லாரி மோதல்: 10 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் வேன் - லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பனியன் தொழிலாளர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
  திருப்பூர்:

  திருப்பூர் செட்டிபாளையத்தில் பனியன் கம்பெனி உள்ளது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கம்பெனி வாகனத்திலேயே தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். வேலை முடிந்ததும் அவர்களை வீட்டில் இறக்கி விடுவது வழக்கம்.

  இரவு வேலை முடிந்து பனியன் தொழிலாளர்கள் கம்பெனி வேனில் வீட்டுக்கு புறப்பட்டனர். வேன் செவந்தாம்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

  இதில் வேன் டிரைவர்- லாரி டிரைவர் மற்றும் பெண் பனியன் தொழிலாளர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். படுகாயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×