என் மலர்
செய்திகள்

திருப்பூரில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பூலாவரி சுகுமார் நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது வீட்டில் மோகன்ராஜ், கண்ணன் ஆகியோர் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு வேலை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்தனர். தங்கள் மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றனர். நள்ளிரவில் திடீரென வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 சைக்கிள்கள் தீ பற்றி எரிந்தது.
அதில் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் தீயில் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் தங்கவேல், இன்ஸ்பெக்டர் தென்னரசு, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு சோதனை நடத்தியபோது 2 மதுபாட்டில்கள் மற்றும் தீ பெட்டி இருந்தன. போதையில் மர்ம நபர்கள் தீ வைத்தனரா? அல்லது முன் விரோதம் காரணமாக கைவரிசை கட்டினரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் திருப்பூரில் 2 ஆட்டோக்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர் தீ வைப்பு சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story