என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை அகற்றகோரி ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி அருகே பெரியாளூரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பெரியாளூரில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் பெரியாளூர் இணைப்பு சாலையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி துரை பாண்டியன் தலைமை தாங்கினார். திருமுருகன் முன்னிலை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார்.
ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நிர்வாகி கர்ணா, மக்கள் அதிகாரம் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






