என் மலர்
செய்திகள்

பெருந்துறை அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் பகுதியில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம், கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் பிருந்தா(19). இவர் குள்ளம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கம்பெனிக்கு பஸ்ஸில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரது பெற்றோர் விவசாய கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
பெற்றோர்கள் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த பேர்து வீட்டில் இருந்த மகளைக் காணவில்லை. அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் விசாரித்து பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீசில் புகார் செய்தனர் இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story