என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதம்பாக்கம் அருகே கேன் குடிநீர் மையத்தில் முற்றுகை போராட்டம்
    X

    ஆதம்பாக்கம் அருகே கேன் குடிநீர் மையத்தில் முற்றுகை போராட்டம்

    ஆதம்பாக்கம் அருகே கேன் குடிநீர் மையத்தில் அப்பகுதி மக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம்- மேடவாக்கம் மெயின் ரோட்டில் சுரேஷ் நகர் உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள 3-வது தெருவில் ‘கேன் குடிநீர்’ சுத்திகரிப்பு மையம் உள்ளது.

    இது வடிவேலு என்பவருக்கு சொந்தமானது. இங்கு ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இங்கு தண்ணீர் எடுப்பதை கண்டித்து இன்று அப்பகுதி மக்கள் அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ‘5எச்.பி’ திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதாகவும் அதனால் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இப்போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தின் போது ‘கேன் குடிநீர்’ மைய உரிமையாளர் வடிவேலுவுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மெட்ரோ வாட்டர் அனுமதியுடன் தான் இங்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது என உரிமையாளர் வடிவேலு தெரிவித்தார்.

    அதை தொடர்ந்து ‘கேன் குடிநீர்’ மையத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என சுரேஷ் நகர் பகுதி மக்களும், நல சங்கத்தினரும் தெரிவித்தனர்.

    Next Story
    ×