என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    கல்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    கல்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியை சேர்ந்தவர் தணிகாசலம், கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ஜோதி.

    நேற்று மாலை கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டுச் சாவியை வெளியே மறைத்து வைத்திருந்தனர்.

    திரும்பி வந்தபோது வீட்டுக்கதவு திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    வீட்டின் வெளியே மறைத்து வைத்திருந்த சாவியை மர்ம கும்பல் எடுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×