என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
குத்தாலம் அருகே தெரு மின்விளக்குகளை மாற்றிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் சித்தாம்பூரை சேர்ந்தவர் சாமிநாதன்(45). இவர் எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். ஊராட்சி நிர்வாகத்தில் தெரு மின்விளக்குகள் பழுது பார்க்கும் பணிகளையும் செய்து வந்தார். இந்நிலையில் திருவாவடுதுறை ஊராட்சி வடக்குத்தெரு பகுதியில் நேற்று சாமிநாதன் தெரு மின்விளக்குகளை மாற்றிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story