என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கொத்தனார் பலி
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கொத்தனார் பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்து சென்று கொத்தனார் ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கடுவன்சேரியை சேர்ந்தவர் பாலுசாமி. கொத்தனார். இவர் நேற்று இரவு பொத்தனூர் திருமலை நகரில் நடந்து சென்ற போது ரோட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து விட்டார்.

    இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×