என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
    X

    ஈரோட்டில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது. இதில் காயம் அடைந்த வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு, அக்ரஹாரம், அன்னைசத்யாநகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 23). ராஜ்குமார் நேற்று வேலை விசயமாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். ஈரோடு பவானி ரோட்டில் வந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் ராஜ்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜ்குமார் மீது பஸ்சின் பின் பக்க சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயம் அடைந்து உயருக்காக போராடிய ராஜ்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ராஜ்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் ராஜ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×