என் மலர்tooltip icon

    செய்திகள்

    வயலில் கருப்புகொடி நட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி
    X
    வயலில் கருப்புகொடி நட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திய காட்சி

    மயிலாடுதுறை அருகே வயலில் கருப்பு கொடி நட்டு விவசாயிகள் போராட்டம்

    வயல்களில் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் கருப்பு கொடி நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே காவிரி ஆற்றில் கிளை ஆறான மஞ்சளாறு உள்ளது. இந்த ஆறு மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி தாலுக்காகளில் உள்ள ஒரு சில பகுதிகளுக்கு பாசன ஆறாகவும், பெரும்பாலான கிராமங்களுக்கு வடிகால் ஆறாகவும் உள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் மஞ்சலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த ஆறு கடந்த 25 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் புதர் மண்டி தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக செம்மஞ்சேரி, ஊர்குடி பகுதியில் உள்ள வீடு மற்றும் வயல்களில் மழை வெள்ளம் புகுந்தது. மேலும் பட்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர், முட்டம் ஆகிய இடங்களில் மழைவெள்ளம் புகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் வயல்களில் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வயலில் கருப்பு கொடி நட்டு போராட்டம் செய்தனர். பொதுப்பணித்துறை பல ஆண்டுகளாக மஞ்சலாற்றை தூர்வாராததால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள கூறினர்.
    Next Story
    ×