என் மலர்
செய்திகள்

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை தாக்கி கட்சி கொடியை எரித்த பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம்:
சென்னையில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை தாக்கி கட்சி கொடியை எரித்த பாரதீய ஜனதா கட்சியினரை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிதம்பரம் நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கற்பனைச் செல்வன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ராஜா, முத்து மற்றும் சங்கமேஸ்வரன், மகளிர் சங்க நிர்வாகிகள் அமுதா, மல்லிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர்குழு உறுப்பினர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.
Next Story