என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
தேனி அருகே காதலித்து திருமணத்துக்கு மறுத்த புதுமாப்பிள்ளை கைது
By
மாலை மலர்30 Oct 2017 10:10 AM GMT (Updated: 30 Oct 2017 10:10 AM GMT)

தேனி அருகே காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.
தேனி:
மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த சுகுமாறன் மகள் நந்தினி குமாரி. (வயது 31). இவரும் தேனி அருகே முத்து தேவன்பட்டியைச் சேர்ந்த நாராயணன் மகன் அழகுபாலகுமார் (32). இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். மேலும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இது குறித்து பெற்றோரிடம் இருவரும் சம்மதம் கேட்டனர். இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதறகாக பத்திரிகை அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்தனர்.
ஆனால் அழகுபாலகுமார் திடீரென திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் தனது செல்போனையும் ஸ்விட் ஆப் செய்துள்ளார். எனவே தனது தந்தையுடன் நந்தினி குமாரி அழகுபாலகுமார் வீட்டுக்கு சென்று இது குறித்து கேட்டார். அப்போது அழகு பாலகுமாரும் அவரது தந்தை நாராயணன், தாய் லதா ஆகியோர் 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அழகுபாலகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×