search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் டெங்கு கொசு உற்பத்தி: ஊராட்சி செயலர்-டேங்க் ஆபரேட்டர் சஸ்பெண்டு
    X

    திருவண்ணாமலையில் டெங்கு கொசு உற்பத்தி: ஊராட்சி செயலர்-டேங்க் ஆபரேட்டர் சஸ்பெண்டு

    திருவண்ணாமலை அருகே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான, ஊராட்சி செயலர், டேங்க் ஆபரேட்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஏராளமானோர் டெங்கு காய்ச்சலுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன.

    இப்பணிகளை, கலெக்டர் கந்தசாமி நேரில் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தி கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவை அரசு அலுவலகங்கள் என்றாலும் கலெக்டர் அதிரடியாக அபராதம் விதிக்கிறார்.

    இந்த நிலையில், திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் கீழ் சிறுபாக்கம் ஊராட்சியில் கலெக்டர் கந்தசாமி, இன்று காலை டெங்கு கொசுப்புழு அழிக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    அப்போது, ஊராட்சி சார்பில் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தொட்டியை பார்வையிட்ட போது, டெங்கு கொசுப்புழு உற்பத்தியை கண்டறிந்தார். மேலும், குளோரின் பவுடர் கலக்காமல் குடிநீரை சுகாதாரமற்ற முறையில், மக்களுக்கு விநியோகித்ததை கண்டுபிடித்தார்.

    இது சம்பந்தமாக, கீழ் சிறுபாக்கம் ஊராட்சி செயலர் ஸ்ரீதரன், டேங்க் ஆபரேட்டர் அன்பழகன் ஆகிய 2 பேரையும் கலெக்டர் அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். பிறகு, சே.கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தண்டராம்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

    Next Story
    ×