என் மலர்

  செய்திகள்

  தேனி அருகே கடைக்கு சென்ற இளம்பெண்கள் மாயம்
  X

  தேனி அருகே கடைக்கு சென்ற இளம்பெண்கள் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே 2 இளம்பெண்கள் மாயமாகினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  தேனி:

  தேனி அருகே கூடலூர் அண்ணாநகரைச் சேர்ந்த சுந்தரம் மகள் சுபியா (வயது 17). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது மாமா வீட்டு விஷேசத்திற்காக ஊருக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

  பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது தாய் பிரியா கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்த சுபியா மாயமானாரா? அல்லது கடத்தப்பட்டரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி ஈஸ்வரி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். நீலகிரியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

  கருத்து வேறுபாடு காரணமாக ஈஸ்வரி கடந்த சில மாதங்களாக தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஈஸ்வரி மாயமானார்.

  இது குறித்து அவரது தாய் குணஈஸ்வரி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
  Next Story
  ×