என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபானங்கள் விலை உயர்வு: டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வாக்குவாதம்
    X

    மதுபானங்கள் விலை உயர்வு: டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வாக்குவாதம்

    ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
    ஈரோடு:

    டாஸ்மாக் மதுபானங்களின் விலையை குவாட்டர் ஒன்றுக்கு சராசரியாக ரூ,10 முதல் ரூ.12 வரை உயர்த்தி தமிழக அரசு கடந்த 5 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

    இந்த விலை உயர்வு கடந்த 12-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. புதிய விலை உயர்வுக்கு குடிமகன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

    பெரும்பாலான கடைகளில் புதிய விலை உயர்வு பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. ஆனாலும் அதை ஏற்காத குடிமகன்கள் பழைய விலை தான் கொடுப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:-

    மதுபானங்கள் விலை உயர்வை ஏற்று கொள்ளாத சில மதுபிரியர்கள் எங்களுடன் தகராறில் ஈடுப்பட்டு வருகிறார்கள். எங்களுக்கும் இந்த விலை ஏற்றத்துக்கும் எந்த தொடர்பு இல்லை என்று கூறினாலும் அதை அவர்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள்.

    புதிய விலை பட்டியல் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் கடை முன்பு புதிய விலையேற்ற பட்டியலை உடனடியாக ஒட்ட முடியவில்லை. ஒரு சில கடைகளில் மதுபிரியர்கள் போதையில் தகாத வார்த்தையில் திட்டுகிறார்கள் என்று வேதனையுடன் கூறினர்.
    Next Story
    ×