என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே மணல் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
விருத்தாசலம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா, தாசில்தார் பன்னீர்செல்வம், துணை தாசில்தார் முருகன் ஆகியோர் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி வழியாக வெள்ளாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 6 லாரிகளை கோட்டாட்சியர் சந்தோஷ்ணிசந்திரா தலைமையிலான வருவாய் துறையினர் பிடித்து பறிமுதல் செய்து ஒரு லாரிக்கு ரூ.28 ஆயிரம் அபராதம் விதித்து லாரிகளை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

Next Story