என் மலர்
செய்திகள்

சாலிகிராமத்தில் வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
சாலிகிராமத்தில் வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சாலிகிராமம், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலையில் வசித்து வருபவர் ஆனந்தி. இவரது வீட்டில் அதே பகுதியை சேர்ந்த புனிதா கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
ஆயுத பூஜையையொட்டி வீட்டில் உள்ள பொருட்களை ஆனந்தி சுத்தம் செய்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை மாயமாகி இருந்தது. கடந்த சில நாட்களாக புனிதாவும் வேலைக்கு வர வில்லை. அவர் நகையுடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோயம்பேடு அருகே பதுங்கி இருந்த புனிதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.
Next Story






