என் மலர்

  செய்திகள்

  நிலக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் கடத்தி கொலை
  X

  நிலக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் கடத்தி கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே ஜாமீனில் வெளியே வந்தவர் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

  நிலக்கோட்டை:

  திருவாரூர் மாவட்டம் அரியன் வயல் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக்குவார் அலி (வயது 52). இவர் கடந்த 2 நாளுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டியில் இருந்து குருவித்துறை செல்லும் ரோட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இவரை கொலை செய்து மர்ம நபர்கள் வீசி சென்று உள்ளனர்.

  இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்து உள்ளது.

  கொலையுண்ட ஜாக்குவார் அலி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து 3 வழக்குகள் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினசரி அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

  கடந்த 24-ந் தேதி கையெழுத்து போட வந்த ஜாக்குவார் அலியை ஒரு கும்பல் கடத்தி கொலை செய்து அணைப்பட்டி அருகே வீசி சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  ஜாக்குவார் அலியின் கூட்டாளிகளுக்குள் பணம் பங்கு பிரிப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே அதன் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது ஜாக்குவாரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இந்த கொலையை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×