என் மலர்

  செய்திகள்

  மதுரை அருகே இளம்பெண் கற்பழித்து கொலை
  X

  மதுரை அருகே இளம்பெண் கற்பழித்து கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை அருகே இளம்பெண்ணை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  அவனியாபுரம்:

  மதுரை அருகே உள்ள அவனியாபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சிந்தா மணி டோல்கேட் அருகே ரோட்டோரத்தில் முட்புதரில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அரை நிர்வாண நிலையில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

  இதுகுறித்து அப்பகுதி மக்கள் அவனியாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  பிணமாக கிடந்த பெண் பச்சை நிற நைட்டியும், பாவாடையும் அணிந்திருந்தார். வலது காலில் கறுப்பு கயிறும் கட்டி இருந்தார். ரோட்டில் இருந்து அந்த பெண்ணை தரதரவென இழுத்துவந்த அடையாளங்களும் இருந்தன.

  எனவே மர்ம நபர்கள் பெண்ணை கற்பழித்து கொன்று விட்டு இங்கு வந்து வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார் என அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×