என் மலர்

  செய்திகள்

  சோழிங்கநல்லூரில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி
  X

  சோழிங்கநல்லூரில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழிங்கநல்லூரில் குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானார். இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  சோழிங்கநல்லூர்:

  சென்னை சோழிங்க நல்லூர் அடுத்த செம்மஞ்சேரி அம்பேத்கர் நகரில் வசிப்பவர் ஏழுமலை. மயிலாப்பூரில் தனியார் டிராவல்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகன் பிரவீன் குமார் (வயது 6).

  நேற்று ஆயுதபூஜை கொண்டாடுவதற்காக அனைத்து வேலைகளையும் செய்து முடித்த கணவன்-மனைவி இருவரும் மதியம் சுமார் 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரவீன் குமார் வீட்டின் பின் பகுதியில் உள்ள குட்டையில் விளையாட சென்றுள்ளான்.

  தூங்கி எழுந்த கணவன்-மனைவி இருவரும் மகன் பிரவீன் குமாரை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடினர். மகன் கிடைக் காததால் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  இந்த நிலையில் பிரவீன் குமார் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. செம்மஞ்சேரி போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குட்டையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் பிரவீன்குமார் உடலை மீட்டனர். விளையாட சென்ற சிறுவன் குட்டையில் தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு காரணமா என செம்மஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Next Story
  ×