search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலை செய்த கடையில் ரூ.8 லட்சம் பொருட்கள் திருடி விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
    X

    வேலை செய்த கடையில் ரூ.8 லட்சம் பொருட்கள் திருடி விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

    வேலை செய்த கடையில் ரூ.8 லட்சம் பொருட்கள் திருடி விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    கோவை:

    கோவை விலாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் மோசஸ் (வயது 28). இவர் கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    வேலை செய்தபோது விலை உயர்ந்த பொருட்களை திருடி டிபன் பாக்சில் மறைத்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வந்தார். கடந்த 2010-ம் ஆண்டு கடை உரிமையாளர் ஊழியர் மோசசை கையும், களவுமாக பிடித்தார். விசாரணையில் 2 ஆண்டுகளாக இந்த நூதன திருட்டில் ஈடுபட்டதும், ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்களை அவர் திருடியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

    மோசஸ் மீதான வழக்கு கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வேலுச்சாமி கடையில் நூதன முறையில் திருடிய மோசசுக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×