என் மலர்

  செய்திகள்

  சமூக வலைதளங்களில் அவதூறு: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கமி‌ஷனரிடம் புகார்
  X

  சமூக வலைதளங்களில் அவதூறு: பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் கமி‌ஷனரிடம் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ.ரவி ராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ். திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் பா.ம.க.வில் இருந்து விலகி தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

  இவர் இன்று காலை சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

  பா.ம.க.வில் இருந்து விலகி மலரும் தமிழகம் என்ற தொண்டு நிறுவனத்தை நான் நடத்தி வருகிறேன். அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்துள்ளேன்.

  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சமீபத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருத்தானூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி குமார் என்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்.

  நான் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டதாகவும், வன்னியர்களை பா.ஜனதாவில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் பா.ஜனதாவுக்கு ஆள் சேர்க்கும் வேலையில் நான் ஈடுபட்டிருப்பதாகவும் வதந்தி பரப்பி வருகிறார்.

  இதுபோன்று 100-க்கும் மேற்பட்டவர்கள் எனது வயதான தாயை பற்றியும் அவதூறு பரப்புகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×