என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் ரூ.30 லட்சம் கள்ளநோட்டுகள் வைத்திருந்தவர் கைது
காரைக்குடியில் உள்ள லாட்ஜில் ரூ.30 லட்சம் கள்ள நோட்டுகள் வைத்திருந்த சென்னையை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோவிலூர் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சந்தேகப்படும்படி சிலர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலையொட்டி அங்கு போலீசார் சோதனை நடத்தினர். லாட்ஜின் ஒரு அறையில் சோதனையிட்டபோது அங்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.
இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த போலீசார் அறையில் இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பசீர் (வயது 42) என்பது தெரியவந்தது.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ரூ.30 லட்சத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், பசீரை கைது செய்தனர்.
இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story