என் மலர்
செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
கோவை:
கோவை வால்பாறையை சேர்ந்தவர் சந்திரன். தோட்ட தொழிலாளி.இவரது மகன் பிரபு(வயது 21) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார்.
இதற்காக செங்காட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். மாலையில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர வேலைக்கும் சென்று வந்தார். நேற்று இரவு அவருடன் தங்கியிருந்த நண்பர் அறைக்கு திரும்பினார்.
அப்போது அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்து. இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பிரபு மேற்கூரையில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த நண்பர்கள் கதறி அழுதனர்.
போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரபு நன்றாக படிக்க கூடியவர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை.
அறையில் சோதனை செய்த போது பிரபு பயன்படுத்திய செல்போன் மட்டும் இருந்தது. அதனை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






