என் மலர்

    செய்திகள்

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை
    X

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி விடுமுறை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், திருப்பூர் கலெக்டர் பழனிசாமி, நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) ஓணம் பண்டிகையையொட்டி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் சில பணியாளர்களுடன் செயல்படும்.

    இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகிற 9-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து மாநில அரசு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் செயல்படும்.

    இவ்வாறு அவர்கள் தனித் தனியாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்.
    Next Story
    ×