என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
    X

    காஞ்சீபுரம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

    காஞ்சீபுரம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வாலாஜாபாத் திருமுக்கூடல் இருளர் காலனியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவகி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக தேவகியை 108 ஆம்புலன்சில் வாலாஜா பாத் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவகிக்கு பிரசவ வலி அதிகமானது. வலியால் அவர் அலறி துடித்தார்.

    இதையடுத்து ஆம்புலன்சை சாலையோரம் நிறுத்திவிட்டு அதிலிருந்த மருத்துவ உதவியாளர் கோப் பெருந்தேவி செல்போன் மூலம் டாக்டர்களின் ஆலோசனைப்படி தேவகிக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் ஆம்புலன்சிலேயே தேவகிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனால் ஆம்புலன்சில் இருந்த ஊழியர்களும், தேவகியின் உறவினர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தாயும், சேயும் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தற்போது தேவகியும் அவரது குழந்தையும் நலமாக உள்ளனர்.

    Next Story
    ×