என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் அருகே போலீசார் சென்ற கார் மோதி வாலிபர் பலி: 4 பேர் படுகாயம்
    X

    கடலூர் அருகே போலீசார் சென்ற கார் மோதி வாலிபர் பலி: 4 பேர் படுகாயம்

    கடலூர் அருகே போலீசார் சென்ற கார் நிலைதடுமாறி பஸ் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதியதிது. இதில் வாலிபர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி டாடா சுமோ காரில் போலீசார் இன்று காலை சென்றனர். கடலூர் அருகே சிப்காட் பஸ் நிறுத்தத்தில் வந்த போது அந்த கார் திடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த 10 பயணிகள் மீது அந்த கார் மோதியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் கடலூரை அடுத்த பெரிய பிள்ளையார்மேடு கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×