என் மலர்
செய்திகள்

நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்: முதலமைச்சர் எச்சரிக்கை
நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்று கடலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
வராலற்று சிறப்பு மிக்க கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதில் பெருமைப்படுகிறேன். கடலூர் மாநாட்டின் மூலம் தான் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கடலூர் மாவட்ட பெண்கள் வீரமும் விசுவாசமும் மிக்கவர்கள்.
ஒரு நடிகரும் தலைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள். சமூக விழிப்புணர்வு பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இன்றைய இளைஞர்களுக்கும் நாளைய இளைஞர்களுக்கும் படிப்பினையாக திகழ்ந்தவர். இளைஞர்களை நம்பித்தான் நாடு இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
கடலூர் மாவட்ட மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வாழ்கிறார்கள். இளைஞர்கள் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் சிறப்பாக அதை எதிர்கொண்டார்கள்.
ஜெயலிதாவின் வழியில் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தும் தகுதி தொண்டர்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஆணவம் மிக்கவர்கள் இயற்கையின் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.
கடலூர் துறைமுக மேம்பாட்டு திட்டம் மூலம் மீனவர்களின் படகுகள் எளிதாக வந்து செல்ல முடியும். சரக்குகளையும் எளிதாக கையாள முடியும். விவசாயிகளுக்கு வறட்சி நிவரண நிதி தாராளமாக வழங்கப்படுகிறது. வறட்சியிலும் விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டது தமிழக அரசு. கல்வி வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் இணக்கமாக வாழ வேண்டும். நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம்தெரியாமல் போய்விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரிவாக எடுத்துரைத்தார்.

Next Story