என் மலர்

  செய்திகள்

  தர்மபுரி அருகே பம்புசெட் மோட்டாரில் சிக்கி விவசாயி மனைவி பலி
  X

  தர்மபுரி அருகே பம்புசெட் மோட்டாரில் சிக்கி விவசாயி மனைவி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தர்மபுரி அருகே மோட்டாரை ஆப் செய்ய முயன்றபோது என்ஜினில் சேலை சிக்கியதில் விவசாயி மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
  தர்மபுரி:

  தர்மபுரி அதியமான் கோட்டை ஏலகிரியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் விவசாயி. இவரது மனைவி காளியம்மாள் (வயது 45). இவர்களுக்கு ராஜசேகர் என்கிற சேட்டு என்ற மகனும் உள்ளனர்.

  இந்த நிலையில் காளியம்மாள் தனது மகன் சேட்டுவிடம் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக பம்புசெட் மோட்டாரை ஆன் செய்து விட்டு செல்லுமாறு கூறினார். அவர் மோட்டார் என்ஜினை ஆன்செய்து விட்டு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அந்த மோட்டாரை ஆப் செய்வதற்காக காளியம்மாள் கிணற்று அருகே உள்ள மோட்டார் அறைக்கு சென்றார்.

  அங்கு மோட்டாரை ஆப் செய்ய முயன்றபோது அவரது சேலை என்ஜினில் சிக்கியது. இதில் அவர் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  அப்போது அந்த வழியாக வந்த பொது மக்கள் கிணற்றின் அருகே காளியம்மாள் மோட்டாரில் சிக்கி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவலறிந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காளியம்மாள் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×