என் மலர்

  செய்திகள்

  கிழக்கு கடற்கரை சாலை வழியாக பெருங்குடியில் இருந்து புதுவைக்கு ரெயில்
  X

  கிழக்கு கடற்கரை சாலை வழியாக பெருங்குடியில் இருந்து புதுவைக்கு ரெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிழக்கு கடற்கரை சாலை வழியாக பெருங்குடியில் இருந்து புதுவைக்கு ரெயில் விட ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. சோழிங்கநல்லூர், மகாபலிபுரம், கடலூரை இணைக்கும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  சென்னை:

  சென்னை மாநகரத்தில் இருந்து புறநகர் பகுதிகளை எளிதில் இணைக்கும் வகையில் ரெயில்வே திட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

  சென்னை பறக்கும் ரெயில் (எம்.ஆர்.டி.எஸ்.) பீச்- பெருங்குடி வரை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வழித்தடத்தில் பகல் நேரத்தில் வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பயணம் செய்து வருகிறார்கள். பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த திட்டத்தை மேலும் நீட்டிக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  பெருங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சோழிங்கநல்லூர், கோவளம், மகாபலிபுரம், புதுவை, கடலூரை இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 179 கிலோ மீட்டர் தூரம் இந்த ரெயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து டெண்டர் விடப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

  தற்போது இறுதிகட்ட ஆய்வு பணிகள் முடிந்ததும் பணிகள் தொடங்க ஒப்பந்த தாரர்களுக்கு டெண்டர் விடப்படும். இந்த வழித்தடத்தில் பாலங்கள், ரெயில் நிலையங்கள், ‘லெவல் கிராசிங்’ அமைப்பது குறித்து மணல் பரிசோதனை நடைபெற்று வருகின்றன.

  புதுச்சேரி அரசு அனுமதியுடன் இந்த ரெயில் திட்டப்பணிகளை நிறைவேற்ற நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் வழித்தட பணிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. திட்டப் பணிகளுக்கு இந்திய ரெயில்வே அனுமதி வழங்கி விட்டது.

  7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரெயில் திட்டப் பணிகளை நிறைவேற்ற ரூ.600 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்ட மதிப்பீடு செலவு அதிகரித்து உள்ளது.

  மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு கடந்த மார்ச் மாதம் இந்த ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுவை -தமிழ்நாடு இரண்டு மாநில எல்லைப் பகுதிக்கு இடையில் இந்த ரெயில் பாதை அமைந்து வருவதால் 2 மாநில மக்கள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

  இதுகுறித்து ரெயில்வே பயணிகள் நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

  கிழக்கு கடற்கரை சாலையில் பெருங்குடி, சோழிங்கநல்லூர், கோவளம், மகாபலிபுரம், புதுவை, கடலூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுவது வரவேற்கத்தக்கது. பயண நேரம் குறையும். சென்னை- கடலூரை எளிதில் பொதுமக்கள் சென்றடைவார்கள். இந்த ரெயில் வழித்தடம் பொது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×