என் மலர்

  செய்திகள்

  நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 22-ந் தேதி வேலைநிறுத்தம்
  X

  நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 22-ந் தேதி வேலைநிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் 22-ந் தேதி நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
  சென்னை:

  அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் நிருபரிடம் கூறியதாவது:-

  பொதுத்துறை வங்கிகளை தனியாருடன் இணைப்பது, பொதுத்துறை வங்கிகளுக்கு கூடுதல் கடன் சுமை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை ஏற்படுத்தியது, வாராக்கடன்களை வசூலிக்காமல் ரத்து செய்வது போன்ற ‘வங்கிகள் சீர்திருத்தம்’ என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

  மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்.

  தமிழகத்தில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 60 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொள்வார்கள். அன்றை தினம் மத்திய அரசின் நட வடிக்கையை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், டெல்லியில் செப்டம்பர் 25-ந் தேதி பாராளுமன்றம் நோக்கி பேரணியும் நடத்தப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×