என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரோம்பேட்டை அருகே கார் மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரியாணி கடைக்காரர் பலி
    X

    குரோம்பேட்டை அருகே கார் மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரியாணி கடைக்காரர் பலி

    குரோம்பேட்டை அருகே கார் மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரியாணி கடைக்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பிராட்வே சேவியர் தேருவை சேர்ந்தவர் இக்பால் (வயது 48). இவர் குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் பிரியாணி கடை வைத்து இருந்தார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிகளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    குரோம்பேட்டை, மேம்பாலத்தில் எதிர்ப்புறமாக வந்த போது வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தூக்கி வீசப்பட்ட இக்பால் 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து குரோம் பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த அனகாபுத்தூரை சேர்ந்த டாக்டரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×