என் மலர்
செய்திகள்

பா.ஜனதா இளைஞர் அணி துணைத்தலைவராக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நியமனம்
தமிழக பா.ஜனதா இளைஞர் அணி துணைத் தலைவராக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா இளைஞர் அணி துணைத் தலைவராக டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்ற ஆனந்த் பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆர்.ஜி.ஆனந்த் மத்திய அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்தில் நிபுணரான இவர் சென்னை ஏ.எல்.இன்டர்நேஷனல் நிறுவன தலைவராகவும், புதுக்கோட்டை ஏ.வி.சி.சி. பள்ளி கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
Next Story






