என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை தாக்கி நகை கொள்ளை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கொடைக்கல், கலைநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது25) தனியார் தொழிற்சாலை ஊழியர் இவரது மனைவி மோனிஷா (வயது20). வேல் முருகன் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். மதியம் 3 மணியளவில் வேல் முருகன் வீட்டிற்கு வந்த மர்ம நபர், மோனிஷாவிடம் தன்னை வேல்முருகனின் நண்பன் என்றும், அவர் இருக்கிறாரா என விசாரித்து உள்ளார்.
அதற்கு மோனிஷா, கணவர் வேலைக்கு சென்று விட்டதாகவும் மாலை தான் வருவார் எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது மர்ம நபர் மோனிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மோனிஷா தண்ணீர் எடுத்து வர வீட்டிற்குள் சென்றபோது பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் மோனிஷாவை பலமாக தாக்கினான். இதில் மோனிஷா நிலை குலைந்து கீழே விழுந்தார். அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின், பவுன் தோடு, கால் கொலுசுகளை திருடிக் கொண்டு சென்றுவிட்டார்.
படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த மோனிஷாவை கணவர் வேல்முருகன் வந்து மீட்டு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
பின்னர் இது குறித்து கொண்டபாளையம் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.