என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
ஈரோடு மாவட்டத்தில் ‘ஜிகா’ வைரஸ் பரவாமல் தடுக்க கடும் நடவடிக்கை
By
மாலை மலர்11 July 2017 11:31 AM GMT (Updated: 11 July 2017 11:31 AM GMT)

தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட சுகாதாரதுறை அதிகாரி கூறினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
அம்மாபேட்டை அருகே சித்தார் பகுதியில் என்ஜினீயரிங் மாணவர் தினேஷ் குமார், அத்தாணியில் 3-ம் வகுப்பு மாணவி மைனுகா (வயது 8), கவுந்தப்பாடி அருகே 1-ம் வகுப்பு மாணவர் தர்ஷன், சித்தோடு ரோஜா நகரை சேர்ந்த தீபிகா (9), பவானி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பிரியதர்சினி (17) ஆகியோர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
இப்படி ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி வருவதால் ஈரோடு மாவட்ட மக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டு உள்ளது.
தொடர்ச்சியாக மர்ம காய்ச்சலுக்கு பலதரப்பட்டவர்கள் இறந்து வருவதையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர் முழு வீச்சில் இறங்கி தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தற்போது கேரள மாநிலத்தில் டெங்குவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கேரளாவை ஒட்டி உள்ள கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்போது டெங்கு காய்ச்சலுடன் ஜிகா வைரசும் ஈரோடு மாவட்ட மக்களை பயமுறுத்தி வருகிறது. ஜிகா வைரஸ் நோயை ஏற்படுத்தும் ஒரு வித கொசு மனிதர்களை கடித்தால் அது மூளையை பாதிக்கும் என ஈரோடு மாவட்ட சுகாதார பணிகள் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜிகா வைரசை பரப்பும் கொசு இங்கு கிடையாது. இது வெளிநாட்டு கொசு வகையை சேர்ந்தது. வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டவருக்கு இந்த ஜிகா வைரஸ் இருந்தால் அவர்கள் மூலம் நம் நாட்டில் பரவக்கூடும்.
இதனால்தான் நம் நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை.
அந்த வைரஸ் நோய் பரவும் வாய்ப்பும் இல்லை. எனினும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தொற்று நோய் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிகா வைரசால் ஒருவர் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து விட்டதாகவும் கூறினார்.
இதனால் பக்கத்து மாவட்டங்களான தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜிகா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட சுகாதாரதுறை அதிகாரி கூறினார்.

Next Story
×