search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே விளை நிலங்களை நாசப்படுத்தும் யானைகள்
    X

    திண்டுக்கல் அருகே விளை நிலங்களை நாசப்படுத்தும் யானைகள்

    திண்டுக்கல் அருகே காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் அருகே பள்ளத்துக்கால்வாய், மல்லிகைபாறை, கவுச்சிக் கொம்பு, ஆசாரிப்பட்டி போன்ற கீழ்பழனிமலை பகுதியில் காப்பி, வாழை, ஆரஞ்சு, மிளகு. அவரை, பீன்ஸ், சவ்சவ் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதோடு விவசாய பயிர்களையும் நாசப்படுத்தி செல்கின்றன.

    காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வருகிறது. மீண்டும் காட்டு யானைகள் அப்பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க வனத்துறையினர் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×