என் மலர்
செய்திகள்

தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு
தக்கோலம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தக்கோலம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் கணபதிபுரம் கிராமத்தில் நேற்று முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பட்டாபி மனைவி வசந்தா (வயது65). என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வசந்தா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து தக்கோலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story