என் மலர்
செய்திகள்

ராயக்கோட்டை அருகே பஸ்சுக்காக காத்திருந்த விவசாயி விபத்தில் பலி
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பில்லாரி அக்ரஹார ஊராட்சி கோனேரி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (60) விவசாயி.
இவர் உடல்நிலை சரியில்லாததால் ராயக்கோட்டையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றார்.
பின்னர் சிகிச்சை முடித்து கொண்டு வீடு திரும்புவதற்காக லிங்கனம்பட்டி பஸ் நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார்.
அப்போது ஓசூர்- ராயக்கோட்டை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்த துரைசாமி மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பிஓடி விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி துரைசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து துரைசாமியின் மகன் ரவிகுமார் ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து துரைசாமியின் உடலை கைப்பற்றி தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடிவருகின்றனர்.