என் மலர்

  செய்திகள்

  படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.
  X
  படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

  ஊட்டியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊட்டியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 6 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 குழந்தைகளை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  ஊட்டி:

  கேரள மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோட்டில் இருந்து 16 பேர் ஊட்டிக்கு வேனில் சுற்றுலா வந்தனர்.

  இங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த பின்னர் இரவு 8 மணிக்கு ஊருக்கு புறப்பட்டனர். ஊட்டியில் இருந்து மசினகுடி சாலையில் வேன் சென்றது.

  மசினகுடி சாலை 36 கொண்டை ஊசி வளைவு கொண்டது. இதில் 15-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

  விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 6 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 குழந்தைகளை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  இதுகுறித்து போலீசார் கூறும்போது, இரவு நேரத்தில் இந்த வழியே வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. கல்லட்டி மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


  Next Story
  ×