என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் மேலாண்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    நீர் மேலாண்மை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

    திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பில் நீர் மேலாண்மை பிரசாரம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சார்பில் நீர் மேலாண்மை பிரசாரம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

    நபார்டு வங்கி நாடு முழுவதும் நீர்மேலாண்மை குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் உள்ள 500 கிராமங்களில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை 380 கிராமங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதில் 380 கிராமங்களில் 25 இடங்களில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டும், 5 கிராமங்களில் நீர்வரத்துவாரிகள் சுத்தம் செய்ததன் மூலம் 510 ஏக்கர் நிலத்திற்கு நீர் கிடைக்கும் வகையிலும், 25 இடங்களில் நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நீர் மேலாண்மை மூலம் மழைபெற மரம் வளர்த்தல், மழைநீரை சேமித்தல், நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், அரசு மானிய திட்டங்கள் நீர் சுழற்சியின் முக்கியத்துவம், பயிர் மாற்றத்தின் அவசியம், நீர் நிலைகளை தூர்வாரி புதுப்பித்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சமஉயர வரப்புகள் அமைத்தல் உள்ளிட்ட மற்றும் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளதுடன், பிளாஸ்டிக் உபயோகத்தை முழுவதுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும், வேளாண் கல்லூரி கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டடம் நபார்டு திட்டத்தின் கீழ் விரைவில் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை சேமித்து பயன்பெறும் வகையில் நீர்மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்றிட வேண்டும் என்று தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சோமசுந்தரம், ஆசிரியர்கள், பள்ளிமாணவ, மாணவிகள், சுயஉதவி குழு பெண்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×