search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே கூலி தொழிலாளி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை
    X

    பரமத்திவேலூர் அருகே கூலி தொழிலாளி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராறில் கூலி தொழிலாளி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அன்பு (வயது 50). கூலி தொழிலாளி. இவரது மனைவி அருந்ததி(45). இவர்களது மூத்த மகள் சூர்யா தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இளைய மகள் சந்தியா ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் அன்புக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கூலி வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர் வீட்டில் குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து வந்து வீட்டில் தினமும் தகராறு செய்து வந்தார்.

    இதனால் கோபம் அடைந்த அருந்ததி தினமும் இப்படி மது குடித்து விட்டு வந்து ஏன்? வீட்டில் தகராறு செய்கிறீர்கள் என கூறி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அன்பு தன்னுடைய மனைவி கூறியதை பொருட்படுத்தாமல் நேற்று மீண்டும மது குடித்து விட்டு வந்து போதையில் மனைவியிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

    இதனால் விரக்தி அடைந்த அன்பு தான் வாங்கி வந்த பிராந்தி பாட்டிலை திறந்து அதில் வயலுக்கு தெளிக்ககூடிய பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து ஊற்றி இரண்டையும் கலந்து மளமளவென குடித்தார்.

    இதில் வலியால் அலறி துடித்தார். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். உடேன அவரை உறவினர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு நள்ளிரவு வேளையில் சிகிச்சை பலனின்றி அன்பு பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×