என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சேரவிரும்பும் மாணவ-மாணவிகளுக்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 58 விடுதிகள் (52 பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் 6 கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வருகின்றன. 2017-2018-ஆம் கல்வியாண்டிற்கு விடுதிகளில் சேர்வதற்கு, 4ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்கள் மற்றும் பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவியர்களுடைய சொந்த ஊருக்கும் - விடுதிக்கும் 5 கிமீ தூரத்திற்கு குறையாமல் இருக்கவேண்டும். இது மாணவிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பள்ளி விடுதிக்காப்பாளர்- காப்பாளினிகளிடம் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விடுதிக் காப்பாளினிகளிடம் 12.07.2017-க்குள் ஒப்படைக்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளில் சேர்வதற்கு மாணவ,மாணவியர்கள் 21.07.2017-க்குள் அந்தந்த விடுதிக்காப்பாளர், காப்பாளினிகளிடம் விண்ணப்பங்களை ஒப்படைக்கவேண்டும். காலக்கெடுவுக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ மாணவியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story