என் மலர்
செய்திகள்

கொள்ளிடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை வாலிபர் பலி
கொள்ளிடத்தில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த சென்னை வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சென்னை எழும்பூரை சேர்ந்த கபாலி மகன் கார்த்தி (வயது 18). இவர் தனது நண்பர்களுடன் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் காண கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புறப்பட்டார். அந்த ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்.
ரெயில் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ரெயில்வே பாலம் பகுதியில் சென்றபோது கார்த்தி தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சிதம்பரம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story