என் மலர்
செய்திகள்

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் இன்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர்:
வங்க கடலில் கொல்கத்தாவுக்கு 950 கிலோ மீட்டருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வங்காளதேசம் அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.
இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் இன்று பகல் 12.30 மணி அளவில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Next Story






